தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார். சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் அரசு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் 10,205 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர்ஸ்டாலின் இன்று வழங்கினார். தமிழகத்தில் டி என் பி எஸ் சி தேர்வின் 10,205 இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் 5278 இளநிலை உதவியாளர்கள், 3399 தட்டச்சர்கள், 1077 சுருக்கு எழுத்தாளர்கள் ,425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலார்கள் மற்றும் 19 கள உதவியாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வின்போது அரசு வேலை வாய்ப்பு கிடைத்த “ஒவ்வொரு இளைஞர்களிடமும் தன்னலம் கருதாது ‘நேர்மையுடன் உழைக்க வேண்டும்’ என்று தமிழக முதலமைச்சர் தனது அறிவுரையுடன் வாழ்த்து தெரிவித்து பணி நியமன ஆணைய வழங்கினார். தமிழகத்தின் அமைச்சர்கள் பெரியசாமி , கே.என்.நேரு போன்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.