தமிழகத்தில் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெறும்- மா சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள்  நடைபெறும்- மா சுப்பிரமணியன் அறிவிப்பு!

 வடகிழக்கு பருவமழை தொடங்கப்பட்டுள்ளதால் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந் நிலையில் நாளை (15-ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை( அக்டோபர் 15) ஆம் தேதிதில் 20 இடங்களிலும், சென்னை யில் 100 இடங்களிலும் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற உள்ளன.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லை, இருப்பினும் டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related post

தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை மாநகரத்தில் ‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் அதிகளவில் பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை…