தமிழகத்தில் 100 தொகுதிகளிலும் மருத்துவ க்காப்பீடு திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ‘இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம்’ 48 திட்டத்தின் படி 2021 டிசம்பர் 18 ஆம் தேதி முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தினை விரிவாக்கும் படி தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்காக பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம்களை மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. இதனை தமிழகத்தின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பிரிமியம் தொகை ‘ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 699 இல் இருந்து ரூபாய் 849 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’. இதனால் ஒரு வருடத்திற்கு காப்புறுதி தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் காப்பீடு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970லிருந்து 1829ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் 1,81,860 பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு விரிவான திட்ட மூலம் தமிழ்நாட்டில் 159.48 கோடியே செலவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் 100 தொகுதிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் சிறப்பு முகங்கள் அங்கங்கே நடத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.