தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நீட், ஜே இ இ தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் (14.11.2023)நேற்றைய தினம் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்று உரையாற்றிய அன்பில் மகேஷ்” நீட் தேர்வு எழுத 46 ஆயிரத்து 216 பேரும், ஜே இஇ தேர்வுக்காக 29 ஆயிரத்து 879 பேரும் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் .
மேலும் இரு தேர்வுகளை எழுதவும் 31,730 மாணவர்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மொத்தம் 1.7 லட்சத்து மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வு ஜே இ இதேர்வு பயிற்சிகள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.