யானைகள் கணக்கெடுப்பு பணிகள்இன்று முதல் துவக்கம் என்று தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப் பகுதியைக் கொண்டுள்ளது .இந்த வனப் பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள்மற்றும் மான் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன.
கடம்பூர் கேர்மாளம் உள்ளிட்ட 10 வனரகப் பகுதிகளிலும் , ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வன ரகப் பகுதிகளிலும் யானைகளின் கணக்கெடுப்பு இன்று மே 23 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.