தமிழகத்தில் உள்ள மூத்த குடி மக்களுக்காக கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் தொடங்கப்படுகிறது. இந்த ஆன்மீக பயணத்தில் தமிழகத்தில் சென்னை ,தஞ்சை மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். கட்டணமில்லா ஆன்மீகப் பயணத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1000 மூத்த குடிமக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆடி மாதம் கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் ஜூலை 19 முதல் 26ஆம் தேதி வரை ,ஆகஸ்ட்2 முதல் 9ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக தொடங்கப்படுகின்றன. எனவே தமிழகத்தில் உள்ள 60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்கள் ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.