ஆடி மாதத்தில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் தீரச்சின்ன மலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. திருப்பூர் மாவட்டத்திலும் இன்று வீர சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப் 18 விழாவை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் ஆட்சியர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.