தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் 18-ஆம் தேதி கோவை மாநகரில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் தமிழத்தில் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர்ப் பகுதிகளில் 265 முகாம்கள் என ஏறத்தாழ ஒரு வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட 8.74 லட்சம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு கண்டு சாதனை படைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 12 ,525 கிராம ஊராட்சிகளில் 2500 சிறப்பு முகாம்கள் நடக்கப்பட உள்ளதாகவும் ,இந்த முகாம்கள் நடக்கவிருக்கிறது. ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வாய்ப்புகளைப்பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .