நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சுங்க சாவடிகளில் சுமார் 600 சுங்க சாவடிகள் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் என இரண்டு முறை சுங்க கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த வருடம் 2024 இல் ஏப்ரல் 1-ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்த இருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 36 சுங்க சாவடிகளிலும் கட்டணம் நேற்று இரவு நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஜீப், கார், வேன்,லாரி அனைத்துவகையான கனரக வாகனங்களின் சுங்க கட்டணம் ஏற்கனவே இருந்தை விட தற்போது 5 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களான லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வாடகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இந் நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்விற்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.