உலகில் அனைத்து பகுதிகளிலும் குரங்கம்மை அதிகமாக பரவி வருகிறது. இந் நிலையில் தமிழகத்தில் குரங்கம்மை காய்ச்சல் இல்லை . இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் குரங்கம்மை தடுப்பு சிகிச்சைக்காக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 200 மருத்துவர்களுக்கு குரங்கம்மை நோயைத் தடுப்பதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. குரங்கம்மை காய்ச்சலைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுபிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
