மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 100-ஆவது பிறந்த நாள், கடந்த ஜூன் 3-ஆந் தேதி கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து கலைஞர் அவர்களின் நினைவாக ரூ 100 நாணயம் . வெளியிடப்பட உள்ளது.சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 6:50 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு 100 ரூபாய் நாணய வெளியிட்டு விழா நடைபெற உள்ளது. 
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையிலும் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு தமிழக அரசு சார்பாக நடைபெறுகிறது. மேலும் முக்கிய பிரபலங்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
