இந்த வருடம் 2024இல் தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனத் தடுப்பதற்காக ரேபிஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் நகர சுகாதார அலுவலர்களுக்குப் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரமும் எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 20 குப்பிகள் ரேபிஸ் தடுப்பூசியை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் கூட ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கு அல்ல மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை உத்தரவினை வழங்கியுள்ளது.