வடக்கிழக்கு பருவக்காற்று காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் தற்போது வலுவான புயலாக மாறி உள்ளது. இதற்கு மிக்ஜாம் புயல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்தப் புயலானது நாளை 3ஆம் தேதி வலுப்பெற்று, 4 -ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.
இதன் வேகம் 100 கிலோ மீட்டராக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்குச் செல்லக்கூடாது! என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் நாளை மறுநாள் டிசம்பர் 5 ஆம்தேதி சென்னை -மசூலிப்பட்டினம் அருகே கடப்பதாக இருந்த நிலையில் இதன் வேகம் குறைந்ததால் நெல்லூர் அருகே கரையே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிகமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.