தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்குத் தற்காலிக தடைவிதிப்பு. தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம் பாறை கிராமத்திற்கு அருகே இப்படத்தின் சூட்டிங்கின் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சூட்டிங் பாட்டில் குண்டு வெடிப்பது போல காட்சிகள் எடுக்கப்பட்டு அதிநவீன லைட் செட்டுகள் போடப்பட்டன.
இதனால் மத்தளம் பாறை கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள வனத்தில் வசித்து வரும் வனவிலங்குகள் மற்றும் காட்டு யானைகள் அச்சமடைந்தன. இதன் காரணமாக மத்தள பாறையில் கிராமத்தில் புகுந்து விவசாய நிலங்களையும் பலவித தென்னை மரங்களையும் அடியோடு சாய்த்து சேதப்படுத்தின. இதனால் பெரும் பாதிப்பு அடைந்த விவசாயிகள் புகார் அளித்து கோரிக்கை எழுப்பினர். இந்த புகாரின் பேரில் வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது எந்தவிதமான அனுமதி பெறாமல் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டன எனத் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து முறையான அனுமதி பெறாமல் சூட்டிங் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்ட மத்தள பாறை கிராமத்தின் மாவட்டஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் “ஷூட்டிங் தற்போது இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படும்” என படக் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்..