தஞ்சை பெரிய கோயிலில் வருகை தரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு !

தஞ்சை பெரிய கோயிலில்  வருகை தரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு !

தஞ்சை பெரிய கோயில் கட்டிட கலையில் உலகப் புகழ்பெற்ற தளமாக விளங்குகிறது. பத்தாம் நூற்றாண்டு ராஜராஜ சோழன் மன்னனால் கட்டப்பட்டது. இந்தத் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்குப்பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் ஆண்களும், பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். அது நமதுபாரம்பரியத்தைச் சிதைப்பதாக உள்ளது . இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை சார்பாக கோயிலின் நுழைவாசலில் உள்ள பலகையில் ஆண்கள் வேட்டி ,சட்டை, பேண்ட் அணிந்தும் ,பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்தும் ஆடை கட்டுப்பாடுடன் கோவிலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Related post