மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 29 பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். முன்னதாகவே மத்திய அரசால் பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெற உதவும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் விதிமுறை இருந்தது.
இந் நிலையில் 70 வயதைக் கடந்த முதியோர்களும் பயன்பெறும் வகையில் திட்ட முன்னேற்பாடுகளளை மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டடியூட்டின் 2-ஆவது வளாகத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து டெல்லியில் இன்று பொது மக்களுக்காக ரூபாய் 120 ,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்கள் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.