கடந்த நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. டெல்லியில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளால் காற்றின் தரம் பாதிப்படைந்து. இதனால் ஆஸ்துமா , மூச்சு திணறல் போன்ற நோய் உள்ளவர்களும்,பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். டெல்லியில் மூச்சு முட்டும் அளவிற்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் டெல்லியில் ஆரம்பம் தொடக்கப் பள்ளிகளான நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .6 ,9 ,11 வகுப்புகளுக்கு நேரடி பள்ளிகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர, கட்டுமான பணிகளுக்காக சரக்குகளை ஏற்றி வரும் மிக பெரிய கனரக வாகனங்களாக லாரி போன்ற வாகனங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் காற்றின் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்று காற்றின் தரத்தை காப்பதற்காக ஆலோசனை நடைபெற்று வருகிறது.