டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அமெரிக்கா அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தது.
இந் நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி 111 ரன்கள் என்ற இலக்குடன இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இறுதியாக 18.2 ஓவர்களில் இந்திய அணி 111 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது. இந்தியாவின் வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.