டி.என். பி.எல் சுற்றில் கோவை- திண்டுக்கல் மோதல்; ஏழாவது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8அணிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் சேலம் அருகே வாழப்பாடியில் எஸ்.சி .எப் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை 7:30 மணியளவில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் முதலில் இரண்டு இடங்களை பிடித்த கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகனும் போட்டியிட உள்ளனர். ஷாருக்கான் தலைமையில் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் கேப்டன் ஆர் அஸ்வின் தலைமையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது .
கோவை அணியில் கேப்டன் ஷாருகான், சுரேஷ்குமார், சுஜய், எம் சித்தார்த், தாமரைக்கண்ணன் ,யுத்தீஸ்வரர் ஆகியோர் நல்ல ஆட்டக்காரர்களாக உள்ளனர். திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ஆர் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ,சுபாத் பாட்டி ,ஷிவம் சிங், விமல் குமார் ,மதிவாணன் ஆகியோர் சிறந்த ஆட்டக்காரர்களாக நம்பிக்கை அளிக்கின்றனர். எனவே இன்று இரவு நடைபெற இருக்கும் போட்டிக்காக இவ்விரு அணிகளான (கோவை- திண்டுக்கல்) அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை தீவிரம் காட்டப்படுகிறது.