ஜூலை 28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு!

ஜூலை 28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் மலையாளம் நடிகர் மோகன்லால், போன்ற திரை பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்துள்ளார். நடிகர் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்  திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான ‘காவலா’ என்ற பாடல் இணையதளங்களில் வைரலாகி  பார்வையாளர்களைக்  கவர்ந்து வருகிறது.  இதை தொடர்ந்து ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது . ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பினைத் தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
தனுஷின் ராயன்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

தனுஷின் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம்…

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி நடித்து வரும் 50-ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன்,…