ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜூனியர் ஆடவர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி 10 ஆவது தொடர் ஓமனின் சலாலா நகரில் மே 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. 10 அணிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி இறுதியாக தேர்வு செய்யப்பட்டு இவ்விரண்டு அணிகளிடையே ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர் 13 நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், மற்றும் அரை ஜுத் சில் ஹுன்டாலுக்கு தலா ஒரு கோல் எடுத்து இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2004 ,2008 ,2015 சென்ற வருடங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த வருடம் 2023ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நான்காவது முறையாக இந்தியா அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. எனவே ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகைகள் வழங்க அறிவித்த நிலையில் வீரர்கள் தலா 2 லட்சம் ரூபாயும் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 1 லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.