சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகள் விற்பனை:

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகள் விற்பனை:

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகள் விற்பனை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளை காண்பதற்காக டிக்கெட்டுகள் இன்று நேரடியாகவும், ஆன்லைனிலும் விற்கப்படுகின்றன. 2023 ஐ.பி.எல் தொடரான லீக் போட்டியில் 16 – ஆவது  சீசனான போட்டியில் சென்னை ஹைதராபாத் அணிகளிடையே மோதல்கள் நடைபெற உள்ளது. வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைஸ் ஹைதராபாத் இடையே போட்டிகள் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று காலை சேப்பாக்கத்தில் ஒன்பது முப்பது மணி முதலே டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதின.

டிக்கெட்டுகள் ரூ. 1500, ரூ.2000, ரூ.2500 என தரவாரியாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும்      ஆன்லைனில்     ரூ. 3 ,000, ரூ.5 000 என டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய இரவு முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர். ஏராளமான பெண்கள் கூட்டம் மைதானத்தில் இருந்ததால் டிக்கெட்டுகள் வாங்கும் பொழுது பெண்களுக்கான வரிசை வேண்டும் என்ற வாக்குவாதமும் நடைபெற்று பெண்களுக்கு உண்டான டிக்கெட்களும் கிடைக்கப் பெற்றன. ரசிகர்கள், பொதுமக்களிடையே கருத்து கேட்டபோது “தோனியைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்து போராடி வாங்கியுள்ளோம்” என்றனர். டிக்கெட்டுகளை, ‘பேடிஎம்’ மற்றும் www.insider.in என்ற இணையதளத்திலும், பெறலாம்.

 

Related post

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23 முதல் தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனிஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது .இந்தப் போட்டிக்கான…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி  தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர்…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…