சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நான்கு வழி சாலை மேம்பாலம். வள்ளுவர் கோட்டம் அருகே நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரூபாய் 198 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்க கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணை இன்று (ஜூன் 27) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாலம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அருகே உத்தமர் காந்தி சாலையில் அமைந்துள்ள பாம் குரோவ் ஹோட்டலிருந்து தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை அமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாலம்900 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு மேம்பாலம் போன்றே நான்கு வழி கொண்ட மேம்பாலமாக வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட உள்ளது. இந்த மேம்பால கட்டுமான பணிகளுக்கான 8014 சதுர மீட்டர் அரசு நிலம் மற்றும் 2883 சதுர மீட்டர் தனியார் நிலம் தேவை கண்டறியப்பட்டு நில எடுப்பு பணிகள் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.