சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் ஏ.அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரைப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த ஐபிஎஸ் ஏ.அருண் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதலாக புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக காவல் ஆணையர்களைத் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.