வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் காரணமாக வலுவான புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு பெங்கால் என பெயரிட்டப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாடு, இலங்கை உள்பட கடலோரப் பகுதிகளிலும், பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக உருவான இந்த புயல் வலுப்பெற்று இன்று சென்னை கடற்கரைப் பகுதியை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 27 இன்று சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக நடைபெறயிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தேர்வுகளின் தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.