சென்னை பாரிமுனை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை பாரிமுனை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தின் இடர்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது இந்த கட்டிடத்தின்  உரிமையாளர்  பரத் என்பவர் சமீப காலத்தில் தான் கட்டிடத்தை வாங்கினார். இந்த கட்டிடம் 60 வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டது.இந்நிலையில் கட்டிடத்தின் புதுப்பித்தல் பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருந்தனர். ஏப்ரல் 19 காலை 10:30 மணி அளவில் இந்த கட்டிடம் தரைமட்டமாக இடிந்து விழுந்தது.

கட்டிட விபத்து ஏற்பட்ட பகுதியினை  நகராட்சியின் நிர்வாக துறை அமைச்சர் கே.என்.என் நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரடியாகப் பார்வையிட்டனர். மேலும் கட்டிட இடர்பாடுகளை அகற்ற   NDRF      வீரர்கள் மற்றும் தேசிய பேரிட மீட்பு குழுவினர் அழைக்கப்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 30 லாரிகளால் கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கட்டிட இடிபாடுகளில் இருவர்கள்  மீட்கப்பட்டு அவர்களின் படு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் சிலர் இடர்பாடுகளில் மாட்டிக் கொண்டுள்ளனர் எனவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

Related post

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…
சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில்…