தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் சென்னையில் பட்டாசு கடைகள் திறப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பினை தமிழக அரசு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு கடை அமைப்பதற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பகங்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மணிக்குள் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் நடைபெறும் என்று தமிழக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.