சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை தி நகர் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலையில் வழியே செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது .இதற்குப் பதிலாக மேம்பாலத்தின் சார்வீஸ் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி நகர் உஸ்மான் சாலையில் மேம்பால கட்டுமான பணிக்காக ஒரு வருடத்திற்கு (2024 ஏப்ரல் 27 இன்று முதல் 2025 ஏப்ரல் 26 ஆம் தேதி வரை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை பெருநகர காவல் துறை யானது செய்தியாளர்களிடம்”பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்திற்கு மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.