தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்ச்சியாக தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பெரிய நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதல் வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வருகிற 27ஆம் தேதி வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளதால் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந் நிலையில் அமைச்சரவை கூட்டத்தினை அமைச்சர் சிவகாசி மீனா தலைமை வகுத்து நடத்துகிறார்.