சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனையை மேற்கொண்டு நடத்தி வருகிறார். ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவிலிருந்து மிக தாமாதமாக உரிய காலகட்டத்தில் திறந்து விடப்படாததால் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் விவசாய தொழில்களில் பயிர் சாகுபடிகள் சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்து வந்ததனர். இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வேளாண் துறை அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் பரிந்துரைத்து ஆய்வினை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்காக விவசாயிகளின் நலன் கருதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் வேளாண் துறை அமைச்சர்கள், செயலாளர்கள், ஆணையர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதை குறித்து ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.