சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு 1,000 படுக்கை வசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.
கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு மருத்துவ கட்டிடம் தரைதளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் சுமார் 59429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இம் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு 27/4/2023 சென்னையில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்று நாளை மறுநாள் 28/4/2023 மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார் .