சென்னை அண்ணாநகர் ஸ்ரீ தேவி பெரியபாளையத்தம்மன் 51ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொண்டாட்டம்!

சென்னை அண்ணாநகர் ஸ்ரீ தேவி பெரியபாளையத்தம்மன் 51ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொண்டாட்டம்!

 சென்னை மாநகரின் அண்ணா நகர் பகுதியின் ஸ்ரீதேவி பெரியபாளையத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடம் ஆடி மாத திருவிழா அம்மன் ஊர்வலத்தோடு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். இந்த வருடம் 2024 – 51ஆவது ஆடி மாத திருவிழா 5-ஆவது வாரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஆகஸ்ட் 16ஆம் தேதி நேற்றைய தினம் 1000 பேருக்குச் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டு, வரலட்சுமி நோன்பு விரதமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.17ஆம் தேதி சனிக்கிழமை இன்று காலை 8:30 மணிக்கு கரக ஊர்வலமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது.

கடைசி நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை 18 -ஆம் தேதி பகல் 12 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6 மணிக்கு கும்பம் கலைத்தல், இரவு 7 மணிக்கு திருவிதி உலாவும் நடைபெற உள்ளது. இக்கோயிலில் 51 ஆவது ஆடித் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முன்னே உள்ள அண்ணாநகர் பகுதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி தருகிறது. இந்த ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி பெரிப்பாளையத்தம்மன் ஆலய குழுவினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.இந்த விழாவினை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பெரியபாளையத்து அம்மன் கோயில் வருகின்றனர்.!

Related post