2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-ஆவது லீக் போட்டி சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய தினம் சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சென்னை அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டும் ஸ்கோர் செய்திருந்தது. அடுத்ததாக அதிரடியாக களம் இறங்கிய பஞ்சாப் அணி ஆட்ட தொடக்கத்திலேயே நன்றாக விளையாட ஆரம்பித்து இறுதியில் 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு163 ஸ்கோர் செய்தது. இதன் மூலம் சென்னை அணியை விட 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.