சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை!தக்காளியின் விலையேற்றம் காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பெரிய கருப்பன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டன. எனினும் தக்காளியின் விளைச்சல், குறைவின் காரணமாக சில்லரை விற்பனை வியாபாரி கடைகளிலும் தக்காளியின் விலை 100, ரூபாயிலிருந்து 120, 130 என விலையேற்றமாக விற்கப்பட்டது. எனவே ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் நாளை முதல் சென்னையில் உள்ள 82 கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படியே வட சென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் மொத்தம் 82 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் . மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் பெரிய கருப்பன் நாளை முதல் ரூ 60 கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.