சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வரும் 25-ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் படப்பிடிப்புகள் ரத்து.படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.

சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25-ஆம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கம், சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் சங்கம், சண்டை இயக்குநர்கள், கலைஞர்கள் சங்கம், நடன இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய 5 சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்ககுமாறு ‌தென்னிந்திய திரைப்பட சங்கம் கேட்டுக் கொண்டு ள்ளது.

Related post

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…
விடாமுயற்சி இறுதி கட்ட படப்பிடிப்புகள் நிறைவு!

விடாமுயற்சி இறுதி கட்ட படப்பிடிப்புகள் நிறைவு!

நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ரெஜினா போன்ற திரைப்…