செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அம்மன் சக்தி பீடம் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஆகஸ்ட் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் அம்மனுக்கு பால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வெளிநாடுகளிலிருந்து பல்வேறு லட்சக்கணக்கான பக்தர்கள மேல்மருவத்தூர் அம்மன் சக்தி கோவிலுக்கு வருகின்றனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அலுவலங்களுக்கும் ஆகஸ்ட் ஆறாம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்டத்தின் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.