மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நடந்து முடிந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 21 ரன்களும்,இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழந்தனர். அதன் பின்னர் ஆடிய. சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி திக்கு முக்காடியது. 6 சிக்ஸர்கள் அடித்து தனது முதல் சதத்தை சூர்யகுமார் யாதவ் பதிவு செய்தார். சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்களைக் குவித்தார். அவரின் பந்துகள் ஆள் இல்லா இடம் பார்த்து ஆளாய்ப் பறந்தன.இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 218 ரன்களைச் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் சஹா 2 ரன்களும், ஹர்திக் பாண்டியா 4 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். டேவிட் மில்லர் 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். ரசித் கான் 32 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்தார். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.