சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் (ஆகஸ்ட் 10)இன்று வெளியாகி கலை கட்டி உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கானா கேரளா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களிடம் மது அருந்துவதால் ஏற்படும் தீமை குறித்து ‘ மது அருந்தக் கூடாது’ என்று வேண்டுகோள் விடுத்தார்.இந்த வேண்டுகோளின் படி இனி மது அருந்த மாட்டோம்! என்று உறுதிமொழியினை மதுரை ரஜினி மன்ற சார்பாக ரசிகர்கள் உறுதி அளித்துள்ளனர்.
‘ஜெயிலர்’ திரைப்படம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் கதைகளாக உள்ளது. எனவே மதுரை மாவட்டம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்திற்கு சுமார் 50,000 மதிப்பில் 247 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையில் அரசியல் ,ஆன்மீகம் ,திருக்குறள், சட்டம், வாழ்க்கை வரலாறு, பைபிள், குரான் மற்றும் பகவத் கீதை போன்ற புத்தகங்கள் இருந்தன.ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பாலதம்ராஜ் தலைமையில் மத்திய சிறை துறை டிஜிபி நல்வழிப்படுத்தும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் சிறைவாசிகளுக்கு நல்வழிப்படுத்தும் வகையில் பியனோ, இசைக்கருவி போன்ற கருவிகளும் வழங்கப்பட்டன. இந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்ற சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.