சுந்தர். சி நடிக்கும் தலைநகரம் 2 கேங்ஸ்டர் போட்டோ வெளியீடு!

சுந்தர். சி நடிக்கும் தலைநகரம் 2 கேங்ஸ்டர் போட்டோ வெளியீடு!

சுந்தர்.சி நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் அதிரடி கேங்ஸ்டர் போட்டோ வெளியீடு.  சுந்தர்.சி நடிப்பில்  தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூன் மாதம் வெளி வருவதாக உள்ளது. தலைநகரம் படத்தின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தலைநகர் 2 படம் உருவாகியுள்ளது. சுந்தர்.சி நடித்த இருட்டு படத்தில் இயக்குனர் வி .இசட் துரை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால் வாணி நடித்துள்ளார். வடிவேலு, யோகி பாபு ,பிரபாகரன், தம்பி ராமையா மற்றும் நடிகை ஐரா போன்ற திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். ‘தலைநகரம் 2 ‘ கிருஷ்ணசாமி ஒளிப்பதிவிலும், ஜிப்ரான் பின்னணி இசையிலும் உருவாகி உள்ளது. எக்சன் வித் கொமெடி என்டர்டெய்ன் மற்றும் பிரைட் தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து   ‘தலைநகரம் 2’ படத்தினைத் தயாரித்துள்ளது.

‘தலைநகரம் 2’ படத்தில் சென்னையை கலக்கும் கேங்ஸ்டராக சுந்தர்.சி அதிரடியாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தலைநகரம் 2 படத்தின் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதையடுத்து மிரட்டலான போஸ்டர் ஒன்று இன்று (மே10 )  வெளியிடப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் தலைநகரம் 2 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் –  சுந்தர் சி இயக்கம்!

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் – சுந்தர் சி இயக்கம்!

கடந்த 2020 ஆண்டில் நடிகை நயன்தாரா, ஊர்வசி மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோரின் அசத்தல் நடிப்பில்மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்…