சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பத்து நாட்களுக்கு விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவானது செப்டம்பர் 10ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. முதல் நாளான செப்டம்பர் 10 ஆம் தேதி தங்கமுஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் காட்சிக்கொடுத்தார். இரண்டாவது நாள் இரவு சிம்ம வாகனத்திலும், மூன்றாவது நாளாக இரவு பூத வாகனத்திலும், நான்காவது நாள் இரவு கமல வாகனத்திலும் ,ஐந்தாவது நாள் ரிஷப வாகனத்திலும், கற்பக விநாயகர் திரு வீதி உலா வந்தார்.
ஆறாவது நாளாக (செப்டம்பர் 15ஆம் தேதி மாலை கஜமுக சூர சம்சாரம் மிகச் சிறப்பாக நடைபெறும். அதைத்தொடர்ந்து ஏழாவது நாளாக மயில் வாகனத்திலும் ,எட்டாவது நாள் குதிரை வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளுவார். ஒன்பதாவது நாளாக (செப்டம்பர் 18 காலை சந்தன காப்பு சிறப்பு அலங்கரிக்கப்பட்டு ,மாலை கற்பக விநாயகர் யானை வாகனத்தில் எழுந்தருளித்து திருவீதி தம் தேரோட்டம் நடைபெறும். பத்தாவது நாளான (செப்டம்பர் 19ஆம் தேதி) கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பத்து நாட்கள் கற்பக விநாயகர் மகா உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.