சிறப்பு ஒலிம்பிக் போட்டி மிக விரைவில் தொடங்க இருக்கிறது. ஜெர்மனி நாட்டில் ஜூன் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்பு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 190 நாடுகளை சேர்ந்த 7000 ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டிகள் 26 பிரிவுகளாக நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்து 255 பேர் கொண்ட குழு சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் 198 வீரர்,வீராங்கனைகள் மற்றும் 57 பயிற்சியாளர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள முகாமில் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை பயிற்சிகள் ஒலிம்பிக் வீரர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
பின்னர் ஜூன் 12ஆம் தேதி இந்திய குழு ஜெர்மனிக்குப் புறப்பட்டு 16 பிரிவுகளில் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்களுக்கு வெள்ளி, தங்கம், வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.