சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத திருவிழா ஆரம்பம். ஜூலை 3ஆம் தேதி இன்று முதல் ஆனி மாத திருமஞ்சன திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கப்பட்டு 12. 7. 24 தேதி வரை பத்து நாட்களும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள் ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனி திருமஞ்சனத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
11.07.2024 அன்று காலை ஸ்ரீ நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருத்தேர் வீதியுலா நடைபெறுகிறது.12.07.2024 ஸ்ரீ நடராஜர், அம்பாளுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.மேலும் நடராஜர் சன்னிதியில் ஸ்படிக லிங்க பூஜை, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பூஜை, வேத பாராயணம் நடைபெறும். இறுதியாக ஜூலை 13ஆம் தேதி சிவபெருமான் அம்பாளுடன் முத்து பல்லக்கில் திரு வீதி உலாவும் நடைபெறுகிறது. இதேபோன்று திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலும் திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெறுகிறது. எனவே ஆனி மாத திருமஞ்சன விழாவின்போது தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிவபெருமானைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் ஏராளமாக காணப்படுகிறது.