சிக்கிம் பகுதியில் 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் மீட்பு!

சிக்கிம் பகுதியில் 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் மீட்பு!

சிக்கிம் பகுதியில் 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் மீட்பு.வடக்கு சிக்கிம் பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள்  300  சுற்றுலா பயணிகளைப்  பாதுகாப்பாக மீட்டனர்   .சிக்கிம் பகுதியில்  கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிக்கிம் லாச்சென்,லாச்சென் சுங்தாங்  பகுதியில் நிலச்சரிவு   ஏற்பட்டது. இந்த நிலையில் சாலை துண்டிக்கப்பட்டதால் அங்கு சுற்றுலாக்கு வந்த 300 பயணிகள் நிலச்சரிவினால் சிக்கி தவித்து அவதிப்பட்டனர். உடனே தகவல் அறிந்த இந்திய ராணுவ வீரர்கள்   சிக்கிம் பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவத்தின் ‘திரிசக்தி’ பிரிவு  வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.

இந்திய ராணுவ வீரர்கள் தற்காலிக பாலத்தை அமைத்து சுற்றுலா பயணிகளை காங்டாங் நோக்கி நகர்த்துவதற்கு உதவி செய்தனர். மேலும் இந்திய ராணுவம் கூடாரங்கள் மூலம் முகாம் அமைத்து உணவு ,தங்குமிடம் ,மருத்துவ உதவி போன்றவற்றை சுற்றுலா பயணிக்கு வழங்கி உதவி  செய்தனர். மேலும் சனிக்கிழமை அன்று சிக்கிமின் மலைப்பகுதியில் 2000 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர் என்று இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related post

இந்தியாவில்  காலாட் படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இந்தியாவில் காலாட் படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இந்தியாவில் (அக்டோபர் 27 )இன்று காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு காஷ்மீருக்கும்- பாகிஸ்தானுக்கும் எதிரான போரில் இந்திய ராணுவம் வீரப் போர்…
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு:

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு:

தமிழகத்தில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு:   சென்னை சாந்தோம் ஜெயின்ட் பீட்ஸ் பள்ளியில் 500 இளம் கீபோர்டு இசை கலைஞர்கள்…