சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 3. 10. 2023 இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல ஆலோசனைகளை நடத்திய முதலமைச்சர் “போதை பொருளால் வரும் எதிர்கால தலைமுறையினர் சீரழிக்கப்படுகின்றனர். எனவே கள்ளச்சாராயம் ,போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்க வேண்டும், சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. எனவே காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை போன்றவை இணைந்து தமிழகத்தில் சாலை திட்டங்களை வகுத்து சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க வேண்டும் என்றும், பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் செயல்களில் ஈடுபவர் மீதும் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தினார்.

மேலும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ! என்றும் மாநாட்டில் அறிவித்துள்ளார்.
