சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆரம்பம்,!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆரம்பம்,!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு நவராத்திரி விழா தொடங்கப்பட்டு கொண்டாடப்படும். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் அக்டோபர் 3-ஆம் தேதி அம்மனுக்கு குமாரிகா அலங்காரம், 5-ஆம் தேதி கல்யாணி அலங்காரம் ,7-ஆம் தேதி காளகா அலங்காரம் ,8-ஆம் தேதி சண்டிக அலங்காரம் ,9ஆம் தேதி சாம்பவி அலங்காரம், 10 -ஆம் தேதி துர்கா அலங்காரம் ,11 ஆம் தேதி சுபத்ர அலங்காரமான சரஸ்வதி அம்சம் பொருந்தி அலங்காரத்திலும், இறுதியாக 12ஆம் தேதி விஜயதசமி அன்று வேடுபரி அலங்காரத்திலும் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளிப்பார்.

பிறகு 12ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளிப்பார். இவ்விழாவின் போது கோவிலில் விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு , பக்தர்கள் வரவழைக்கப்பட்டு அம்மன் சன்னதியில் வைத்த குங்குமம், மஞ்சள், புடவைகள் வழங்கப்பட்டு நவராத்திரி விழா கோலாக்காலமாக கொண்டாடப்படுகிறது.

Related post

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் விழாக்கோலாகலம் !

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் விழாக்கோலாகலம் !

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி மாரியம்மன் சமயபுரம் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இதனைத்…
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கொலு பொம்மை விற்பனை -அமோக வரவேற்பு!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கொலு பொம்மை விற்பனை -அமோக வரவேற்பு!

அக்டோபர் 15 முதல் நவராத்திரி ஆரம்பம்! நவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில அனைத்து இடங்களிலும் கொலு பொம்மை விற்கப்படுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெருக்களில்…