கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கான தனி வரிசை அமலுக்கு வந்துள்ளது.சபரி மலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜை காரணமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி தொலைந்து விடுகின்றனர். எனவே , மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்காக தனிவரிசை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக சபரி ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்காக பிரத்தேக வசதி தயார் செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் கையில் குழந்தையின் பெயர், பாதுகாவலரின் மொபைல் எண் ஆகியன அடங்கிய பேண்ட் அணிவிக்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் அவர்களது உடன் வரும் பெற்றோர் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் தவறான முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக கோவிலின் ஊழியர்கள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் மூலம் 18-ஆம் படி ஏறி ஐயப்ப சாமியை குழந்தைகள் தரிசிக்கலாம்.