உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பில் தன் தந்தையின் நினைவாக 2300 ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் புதிய பள்ளிக்கூடம் ஒன்று மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்டு வருகிறது. 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிறந்த இவர் ஒரு மராத்தியர். இவர் தந்தை உலகப் புகழ் பெற்ற மராத்திய நாவலாசிரியர் ரமேஷ் டெண்டுல்கர் ஆவார்.
கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள சந்தல்பூர் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வி அறிவு என்பது 56.6 சதவீதமாக இருந்தது. எனவே சச்சின் டெண்டுல்கரின் தந்தை நினைவாக மத்தியபிரதேசத்தில் உள்ள சந்தர்ப்பூர் அருகே உள்ள கிராம பகுதிகளின் 2300 ஏழை குழந்தைகளுக்கு வரும் பத்து ஆண்டுகளில் இலவச கல்வி வழங்க சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பாக பள்ளி கட்டப்பட்டு வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கான சிறந்த கல்வி அறிவு வழங்குவதற்காகவும், அடுத்து வரும் தலைமுறையினர் வாழ்வாதாரம் உயர்த்துவதற்காகவும் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இது சச்சின் டெண்டுல்கரின் தந்தை நினைவாக இப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ரசிகர்கள் சச்சினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.