மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்கிரி கோயிலுக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந் நிலையில் கடந்த மாதங்களாக வெள்ளிங்கிரி மலையில் ஏறுபவர்களுக்கு இதய நோய் ,மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காக வனத்துறை சார்பாக வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கோயிலுக்கு வருபவர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
மேலும் இதய நோய், மூச்சு திணறல், மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.