கோவை மாவட்டத்தில் அக்னி வீரர் ஆள்சேர்ப்பு முகாம்!

கோவை மாவட்டத்தில் அக்னி வீரர் ஆள்சேர்ப்பு முகாம்!

 கோவை மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கத்தில் அக்னி வீரர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன்களுக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் திண்டுக்கல் மதுரை தேனி திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகாமில் ராணுவ வீரர் பணியில் சேர்வதற்காக10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் முக்கிய ஆவணங்களையும் அனுமதி சீட்டும் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related post