கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோவையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கோவையில் தங்க நகை தயாரிப்பாளர்களுக்கு ரூ,126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்து தரப்படும் என்றும், 17 ஏக்கரில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும், விளை நிலங்களில் யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகளுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் ரூ.7 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கோவையில் ரூ.1,848 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.